ETV Bharat / state

ராஜினாமா செய்வேன் என கூறிய அண்ணாமலை; "எங்களுக்கு கவலை இல்லை"-ஆதி ராஜாராம்

author img

By

Published : Mar 18, 2023, 4:03 PM IST

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சாதாரண தொண்டனாக கட்சிப் பணி செய்வேன் என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து மகிழ்ச்சி அளிப்பதாக, அதிமுக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் கூறியுள்ளார்.

அதிமுகவின் ஆதிராஜாராம் வரவேற்பு
அதிமுகவின் ஆதிராஜாராம் வரவேற்பு

சென்னை: சென்னையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, "அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சிப் பணி செய்வேன். பாஜக தனித்து போட்டியிட்டால் தான் தமிழ்நாட்டில் வளர முடியும்“ என கூறினார்.

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், ”அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற அண்ணாமலையின் பேச்சு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அதில் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. யார் இருந்தால் என்ன, யார் இல்லாமல் இருந்தால் என்ன? எங்களுக்கு கவலை இல்லை.

ஒரு சுமூகமான சூழலில் அரசியல் கட்சிகள் இருந்த நிலையில், அதை மாற்றி தனது சொந்த கட்சிகாரர்களை கொச்சைப்படுத்தி, அதை மற்ற கட்சியிலும் பயன்படுத்தலாம் என்ற நிலை பாஜகவில் தற்போதைய காலகட்டத்தில் உருவாகி இருக்கிறது. இந்த நோய் மற்ற கட்சிகளுக்கும் தொற்றிவிடக் கூடாது. அண்ணாமலை எடுக்கும் முடிவு நல்ல முடிவுதான். அதனால் அவர் எடுக்கும் முடிவை அன்புடன், பாசமுடன் வரவேற்கிறோம்" என கூறினார்.

இதற்கிடையே அண்ணாமலையின் கருத்து குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், "அண்ணாமலை கூறிய தேர்தல் கூட்டணி தொடர்பான கருத்து அவருடைய சொந்த கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் டெல்லி தலைமை தான் முடிவெடுக்கும். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம். கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு" என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தாலும், அண்மைக்காலமாக இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த சில நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தது இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா என கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய கட்சிகள், மாநில கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ளன. தற்போது இருக்கும் சூழ்நிலையில், அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு சில இடங்களில் கூட வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கக்கூடிய அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால், பாஜக கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பதும் சந்தேகம் தான் என்றும், அதனால் தான் தனித்துப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டை அண்ணாமலை தெரிவிப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக தனித்து போட்டியிட விருப்பம்.. அண்ணாமலை பேச்சின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.