ETV Bharat / state

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்

author img

By

Published : Aug 5, 2021, 8:39 PM IST

கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

ன
னக

சென்னை: 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள 47 முக்கிய திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இன்று (ஆக.5) மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கி வைத்தார்.

அதன்பின் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் குருக்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் அடங்கிய விவரப் பலகையைத் திறந்து வைத்தார். அமைச்சர் முன்னிலையில் வேங்கடசுப்பரமணியம், கபாலி குருக்கள், பாலாஜி குருக்கள் ஆகியோர் தமிழில் அர்ச்சனை செய்தனர்.

மேலும் 500 கோயில்களில்..

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தற்போது இங்கு மூன்று அர்ச்சகர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 500-க்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்படும்.

செய்தியாளர்களுக்கு  பேட்டி
செய்தியாளர்களுக்கு பேட்டி

அர்ச்சகர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. கோயில் அர்ச்சகர்களின் விவரத்தை இணைய தளத்தில் வெளியிட ஆலோசிக்கப்படும்.

முன்வருபவர்களுக்குப் பயிற்சி

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பயிற்சி வேண்டும் என யார் முன்வந்தாலும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் 'தமிழில் குடமுழுக்கு நடத்தப்படுமா?' என்று எழுப்பிய கேள்விக்கு அனைவரின் விருப்பத்தையும் கேட்டு ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார்.

இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை முதல் கோயில்கள் திறப்பு - தமிழில் அர்ச்சனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.