ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற நடவடிக்கை - துணைவேந்தர் வேல்ராஜ் - Anna university VC name

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பின் கல்லூரிகளில் ஆய்வு மேற்க்கொள்ளப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற நடவடிக்கை

author img

By

Published : Jun 7, 2023, 8:25 AM IST

அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற நடவடிக்கை

சென்னை: இது தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி வாரியம் வெளியிட்டது. சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 22வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைகழகம், 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 20வது இடத்திலிருந்து 14வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 17வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இரண்டு ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால் சரியான தரவுகள் பதிவு செய்யப்படவில்லை. அதனால், தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். தற்போது, மீண்டும் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.

அதிக ஆராய்ச்சிகளை வெளியிடும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 21வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகம் தற்போது 13வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான சுதந்திரம் அளிக்கப்பட்டதுதான் இதற்கு காரணம்.

ஆசிரியர்கள் செய்யும் பணியை டாக்குமென்டேஷன் செய்ததன் மூலம்தான் நமக்கு இந்த தரம் கிடைத்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், ஆராய்ச்சியில் அதிக அளவில் இடம்பெற்று வருவதால் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச தரவரிசை பட்டியலில் 850வது இடத்தில் இருந்து தற்போது 550வது இடத்திற்கு வந்துள்ளது. மேலும், விரைவில் வெளியிடப்பட உள்ள சர்வதேச தரவரிசை பட்டியலில் 300 இடங்களுக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் முதல் 200 இடங்களில் உலக தரவரிசை பட்டியலில் எந்த கல்லூரிகளும் இல்லை. சர்வதேச கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம் பெறுவதே எங்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம், மேலும் வரும் ஆண்டுகளில் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களில் தேசிய தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.

பொறியியல் கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கல்லூரியின் நிலை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தரம் குறைவாக உள்ள கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தேசிய கல்விக் கொள்கை மற்றும் மாநில கல்விக் கொள்கை என்று எதையும் குறிப்பிட்டு பின்பற்றவில்லை. எதெல்லாம் சிறந்ததாக உள்ளதோ, அதையெல்லாம் பின்பற்றுகிறோம்.

தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், இன்ஜினியரிங் திறமையுள்ள மாணவர்கள் குறைவாக உள்ளனர். அதனை சரி செய்யத்தான் திறன் பயிற்சியுடன் கூடிய பாடத்திட்டம் தேவைப்படுகிறது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்வதால் ஐஐடி பாலிடெக்னிக் போன்றவற்றில் மாணவர்கள் குறைவாக சேர்கின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: IIT Madras:இந்தியாவிலேயே முதல்முறையாக கிழக்கு ஆப்பிரிக்காவில் கிளை அமைக்கும் மெட்ராஸ் ஐஐடி..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.