இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் வெளியிட்டுள்ள உத்தரவில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பிலிருந்த ராணி மரிய லியோனியா வேதமுத்து அக்டோபர் 9ஆம் தேதியுடன் 60 வயது நிறைவடைகிறார். எனவே அவர் பதிவாளர் பொறுப்பிலிருந்து அக்டோபர் 9ஆம் தேதி விடுவிக்கப்படுகிறார்.
இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக கிண்டி பொறியியல் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ரவிக்குமார் நியமனம் செய்யப்படுகிறார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு