ETV Bharat / state

பொறியியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றால்... - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி திட்டம் - accreditation to Which engineering colleges

Anna University:தமிழ்நாட்டில் 80 பொறியியல் கல்லூரிக்கு தொடர் அங்கீகாரதொடர்வது தொடர்பாக, பல்வேறு கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 27, 2023, 5:00 PM IST

சென்னை: தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதற்கான கூட்டத்தில், சரியான உள்கட்டமைப்பு வசதிகள், நூலகம், ஆய்வகம் உள்ளிட்டவைகளை கொண்ட கல்லூரிகளுக்கே தொடர் அங்கீகாரம் அளிக்கும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்தாண்டு 80 பொறியியல் கல்லூரிகளுக்கே தொடர் அங்கீகாரம் அளிக்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஜூலை 27) தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தரமற்ற 80 கல்லூரிகளின் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

குறையும் மாணவர் சேர்க்கையால் பாழாகும் பொறியியல் கல்வி: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (All India Council for Technical Education - AICTE) அறிவுரையின் படி உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் சேர்க்கையும் குறைவாக இருக்கின்றது. இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கற்பிக்க முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் உள்ளது.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடம்; ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் சாதனை!

கட்டமைப்பு வசதிகள் இருந்தால் அங்கீகாரம்: மேலும், தேசிய தரவரிசைப்பட்டியலில் இடம் பெறுவதற்கான தரவுகளிலும் பின்னடைவு ஏற்படுகிறது. எனவே, இந்தாண்டு அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் உள்ள கல்லூரிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஆகவே, 80 தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதிய அளவிற்கு கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களும் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற்றம்: 80 தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர் எண்ணிக்கை, பேராசிரியர்களின் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நேரில் ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது. உள்கட்ட அமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை அருகில் உள்ள வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்: எனவே, உரிய உள்கட்ட அமைப்பு வசதிகள் இன்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரிசெய்ய வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளதாக தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம் பெறுவதற்கான ஆய்வுக் கூட்டத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் அதிகளவில் இடங்களைப் பெறும் முன்னாள் மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.