ETV Bharat / state

அரசின் ரூ.19 கோடி பி.எஃப் தொகை நிலுவையால் தொழிலாளர்கள் அவதி: கமலக்கண்ணன் பகீர் புகார்! - போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர ரெட்டி

தொழிலாளரிடம் பிடித்த ரூபாய் 19 கோடி தொகையை எம்.டி.சி நிர்வாகம் தரவில்லை. இதனால் தொழிலாளர் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் என அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

workers are suffering
தொழிலாளர் அவதி
author img

By

Published : May 31, 2023, 11:27 AM IST

சென்னை: தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர ரெட்டியை அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "திமுக தொழிற்சங்கள் நேற்றுமுந்தினம் மாலை முன்னறிவிப்பு இல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை நாங்கள் கண்டித்தோம். போக்குவரத்து துறை பொதுமக்களுக்கான சேவை பிரிவு, வேலை நிறுத்தம் போராட்டம் என்றால் பொதுமக்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.

ஆனால், முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது முறையல்ல, பொது மக்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றால் எப்படி செல்ல முடியும். இதனால் பெண்கள் உட்பட பலர் பாதிப்பிற்கு உள்ளாகினர். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலம் தொடங்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலம் வரையில் தொழிலாளர்கள் நலன் கருதி செயல்பட்டார்கள்.

கரோனோ பேரிடர் காலத்திலும், தொழிலாளர்களை காத்தவர் எடப்பாடி பழனிசாமி. அந்த வழியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக அண்ணா தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முந்தினம் திடீர் என அறிவித்த வேலை நிறுத்தம் குறித்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் பொது மக்களுக்கு எந்தவொரு இடையூறும் வராமல் தொழிலாளர்களுக்கான பாதிப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்நிலையில் அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் அனுமதியோடு தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போக்குவரத்து துறை அமைச்சர் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்கள். அதில் பிரதான எதிர் கட்சிக்கான அண்ணா தொழிற்சங்கத்திற்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

அதையும் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று பல்வேறு வகையில் ஓட்டுநரும், நடத்துநரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு ஒய்வு பெற்றவர்களுக்கான பி.எப் உள்ளிட்ட எந்த தொகையும் கிடைக்கப் பெறவில்லை. மேலும் ஊழியர்கள் காப்பீடு குறித்தும் மனு அளித்துள்ளோம் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து துறை தமிழக மக்களுக்கான சேவை துறை, பல்லவன் கூட்டுறவு சங்கத்திற்கு சுமார் 19 கோடி ரூபாய் தொழிலாளரிடம் பிடித்த தொகையை எம்டிசி நிர்வாகம் தரவில்லை. இதனால் தொழிலாளர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் தொழிலாளர்களின் பணத்தை வைத்து திமுக அரசு போக்குவரத்து துறையை நடத்தி வருகிறது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு நடந்தது கண்டிக்கத்தக்கது - ப.சிதம்பரம் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.