ETV Bharat / state

ஒரே நாளில் 11 செல்போன்களை திருடிய ஆந்திர இளைஞர்கள் கைது

author img

By

Published : Mar 18, 2020, 12:13 PM IST

சென்னை: ஒரே நாளில் 11 செல்போன்களை திருடிய ஆந்திர இளைஞர்களைக் கையும் களவுமாக காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பிரத்யேக பயிற்சி பெற்று திருடியதும் அம்பலமாகியது.

cellphone theft
cellphone theft

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் சட்டைப் பையில் இருக்கும் செல்போனை செய்தித்தாள் வைத்து மறைத்து நூதன முறையில் செல்போன் திருடிய ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கடேசன்(22), தமிழ்குமார்(20) ஆகிய இருவர் தனிப்படை காவல் துறையினரிடம் பிடிபட்டனர்.

பிடிபட்ட இருவரிடமிருந்து 11 செல்போன்களை தாம்பரம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நூதன முறையில் செல்போன் திருட மேற்கு கோதாவரி, ஹாக்கிவீடு ஆகிய பகுதிகளில் பயிற்சி பெற்றதாகவும், வார இறுதி நாளில் விஜயவாடா சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்திலும், ரயிலிலும் கைவரிசயை காட்டி வந்ததும் தெரியவந்தது.

ஒரே நாளில் 11 செல்போன் திருடிய ஆந்திர இளைஞர்கள்

2016இல் திருட ஆரம்பித்த இவர்கள், 17 வயதிலேயே செல்போன் திருட்டில் சிறை சென்றவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குமரி முழுவதும் குட்கா சப்ளை செய்த நபர் அதிரடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.