சென்னை: கொசஸ்தலை ஆறும், வங்கடலும் சங்கமிக்கும் இடமான எண்ணூர் முகத்துவராத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், எண்ணெய்க் கழிவுகள் வெள்ளத்தில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவின் பெயரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் சென்னை எண்ணூர் அருகே பெரியக்குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. நள்ளிரவில் வாயு கசிவு ஏற்பட்டதால் பெரியக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பதற்றமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மூலம் கூட்டமாக அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலுக்கு ஆளான நிலையில் அவர்கள் ஆட்டோக்களில் மூலம் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றன. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேர் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டதில், சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு கடற்கரையில் இருந்து 2 முதல் 3 கி.மீ. தொலைவில் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக வருவதாக சொல்லப்படுகிறது. இரவில் இந்த குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமக சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதாக தெரியவந்தது. இந்த வாயு கசிவால், கடல் அலைகளில் வெடித்தும், மேலெலுந்தும் காணபட்டன.
அமோனியா வாயு உறுதி செய்த மாசு கட்டுபாடு வாரியம்: எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயில் இருந்து அமோனியா வாயு கசிந்து உள்ளது. மேலும், சம்பவம் நடந்தை அறிந்து குழு ஒன்று அங்கு விரைந்து காற்றின் தரத்தை ஆய்வு செய்தனர். அதில், காற்றில் 400 சிறு கிராம் (microgram/m3) ஆக இருக்க வேண்டிய அமோனியா 2090 சிறு கிராம் microgram/ m3 ஆகவும், கடலில் அமோனியா 5 mg/L ஆக இருக்க வேண்டிய 49 mg/L இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல் சார் வாரியத்தில் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறுகையில், எண்ணூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மற்றும் கடல் நீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எண்ணுர் சுற்றுவட்டார பகுதியில் அமோனியா வாயு 4 மணி அளவில்படி காற்றில் வெகு தூரம் செல்லவில்லை எனவும், 4.30 மணி அளவில் சின்னக்குப்பம்,பெரியக்குப்பம் பகுதியில் மிதமான அமோனியா வாயு வாசம் தென்பட்டதாகவும். மேலும் குறிப்பிட்ட பகுதியில் அமோனியா அளவு அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அமோனியம் என்றால் என்ன?: அமோனியம்(NH3) என்பது ஒரு சேர்மமாகும். அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். நச்சுத்தன்மை மற்றும் அரிப்புத்தன்மை கொண்ட இவ்வளிமம் ஒருவகை கடும் நாற்றம் (நெடி) கொண்டது. அமோனியா காற்றைவிட இலேசானது. இது உரம் தயாரிக்க அதிகம் பயன்படுதப்படுகிறது.
இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வை தந்த ஐஐடி மெட்ராஸ்..!