ETV Bharat / state

அமமுகவின் புதிய தலைமை அலுவலகம் நாளை திறப்பு!

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகத்துக்கு நாளை திறப்பு விழா நடைபெறுகிறது.

AMMK new head office opening
AMMK new head office opening
author img

By

Published : Mar 11, 2020, 7:47 PM IST

சென்னை அசோக் நகரில் இதற்கு முன்னர் இயங்கிவந்த அமமுக தலைமை அலுவலகம், இசக்கி சுப்பையாவிற்கு சொந்தமான கட்டடம். தற்போது இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைந்துள்ளதால், அமமுக தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் புதிதாக திறக்கப்படவுள்ளது.

அதிமுகவிலிருந்து விலகிய தினகரன், அமமுக என தனியாக கட்சியைத் தொடங்கி சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல், ஊராட்சி, உள்ளாட்சித் தேர்தல் என போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.

மேலும், அதிமுகவுக்கு மாற்று அமமுகதான் என்ற நிலையை உருவாக்க கடந்த 3 ஆண்டுகளாக தினகரன் போராடி வருகிறார். தினகரன் கட்சியை ஆரம்பிக்கும்போது இசக்கி சுப்பையா அவருக்கு ஆதரவாக இருந்தார். பின்பு சென்னை அசோக் நகரிலுள்ள தனது சொந்தமான இடத்தை அமமுக தலைமை அலுவலகம் அமைத்துக்கொள்ள உதவினார்.

சிறிது கால இடைவெளியில் இசக்கி சுப்பையா மீண்டும் அதிமுகவுக்கு தாவினார். இதன் காரணமாக அசோக் நகரில் இயங்கி வந்த அமமுக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய பொறுப்பு தினகரனுக்கு ஏற்பட்டது. புதிய இடங்களைத் தேடி அவர் இறுதியாக ராயப்பேட்டை பகுதியை தேர்ந்தெடுத்தார்.

இந்நிலையில், ராயப்பேட்டையில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகம் இணையம், தொலைபேசி உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களின் படங்கள் அதன் முகப்பில் உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை பதிக்க புதிய அலுவலத்தில் இருந்து டிடிவி தினகரன் பணியை தொடங்கவுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.