ETV Bharat / state

அமமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தினகரன் - தினகரன்

சென்னை: விவசாயம், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சலுகைகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அமமுக தேர்தல் அறிக்கையை வெளியீடு
author img

By

Published : Mar 22, 2019, 6:54 PM IST

சென்னை அசோக் நகரில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இன்று துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில்,

ஏழு பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை வலியுறுத்தப்படும்.

நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.

மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படும்.

மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.

ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டு ரூ.10,000 கல்வி உதவி தொகை.

கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச WIFI வசதி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி வழங்கப்படும்.

கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு ரூ.50,000 முதல் 2 லட்சம் வரை வணிகக் கடன்.

முதியோர் உதவித்தொகை மாதத்திற்கு ரூ.1000-லிருந்து ரூ.2000-ஆக உயர்வு.

வயது முதிர்ந்த ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்கள்,நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும்உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்ப்பன் போன்ற விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்

அமமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டு அறிவிப்புகளை எடுத்துரைக்கிறார்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த விதத்திலும் தமிழகத்தில் நுழைவதை தடுத்து நிறுத்தப்படும்.

ஆற்றுப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனத்திற்கு வழி இல்லாத இடங்களில் விவசாயத்தை தொடரும் வகையில் இலவசமாக ஆழ்துளை கிணறுகளௌ அமைக்கப்படும்.

இயற்கை சீற்றம் தொடர்பான தரவுகளை பெற தமிழகத்துக்கென தனி செயற்கைகோள் ஒன்றை இஸ்ரோவுடன் இணைந்து ஏவ நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழை மாணவிகள் இளநிவை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் இரண்டுதவணைகளில் வழங்கப்படும்.

கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு வணிகக் கடனாக ஐம்பாதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை கடனுதவி ஏற்பாடு செய்யப்படும்.

ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து செய்வது குறித்துஆராய வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது உட்பட ஜாகௌடோ ஜியோ கூட்டமைப்பின் அத்தனை கோரிக்கைகளுக்கும் தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்.

பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றம் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசுக்கு உரிய அழுத்தங்கள் கொடுத்து கச்சத்தீவை திரும்பப்பெற அ.ம.மு.க. பாடுபடும்.

 7 பேர் விடுதலைக்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃபு சொத்துகள் மீட்கப்படும். அதில் தகுதியுள்ள இடங்களுக்கு ஏழை முஸ்லிம்களுக்கு வீட்டு வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

சிறப்பு முதலீட்டு மண்டலம் என்ற அந்தஸ்தோடு மாவட்டத்திற்கு ஒரு தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

வாகனங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு ஏற்ப சுங்கக் கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.