ETV Bharat / state

இருமொழியில் அஞ்சல்துறை தேர்வு; டிடிவி தினகரன் கண்டனம்! - அஞ்சல்துறை

சென்னை: "அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடியும்" எனும், மத்திய அரசின் சுற்றறிக்கையை, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கண்டித்துள்ளார்.

டி டி வி தினகரன் கண்டனம் !
author img

By

Published : Jul 13, 2019, 8:10 PM IST

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,“அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்.

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அஞ்சல் துறை வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு அநீதியாக இது அமைந்து விடும். எனவே இந்திய அஞ்சல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 13.07.19

அஞ்சல்துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடியும் என்ற சுற்றறிக்கைக்கு தினகரன் கண்டனம்..

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இருப்பவர்கள் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும்..

தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அஞ்சல் துறை வேலை வாய்ப்பிற்காக முயற்சிப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இது அமைந்து விடும். எனவே இந்திய அஞ்சல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தபடி 23 மாநில மொழிகளிலும் பணியாளர் தேர்வுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்ற சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.