ETV Bharat / state

சசிகலா மீது அமைச்சர்களுக்கு பயம் - அமமுக துணை பொதுச்செயலாளர்!

author img

By

Published : Feb 6, 2021, 7:12 PM IST

சென்னை: சசிகலாவின் மீதுள்ள பயத்தின் காரணமாகவே அமைச்சர்கள் தொடர்ந்து அவர் மீது புகார் அளித்து வருவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் தெரிவித்துள்ளார்.

சசிகலா மீது அமைச்சர்களுக்கு பயம், அதன் புகார் அளிக்கின்றனர் -அமமுக துணை பொதுசெயலாளர்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த ஜனவரி 27ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்த சசிகலாவுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். பின்னர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது அவர் பெங்களூருவில் மருத்துவர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிப்ரவரி 8ஆம் தேதி காலை அவர் பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

இதனிடையே அவரை வரவேற்பது குறித்தான நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் துறையிடம் அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் காவல்துறை அலுவலர்களை நேரில் சந்தித்தார்.

அமமுக துணை பொதுசெயலாளர் செந்தமிழன் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சசிகலாவின் மீதுள்ள பயத்தின் காரணமாகவே அமைச்சர்கள் தொடர்ந்து புகார் கொடுக்கிறார்கள். வருகின்ற 8ஆம் தேதி சென்னை வர உள்ள சசிகலாவை சென்னை கத்திப்பாராவிலிருந்து வரவேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் தியாகராயநகர் இல்லம் வந்தடையும் வரை இந்த நிகழ்ச்சிகள் உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...சசிகலாவிற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் - அதிமுக நிர்வாகி கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.