ETV Bharat / state

WEATHER MAN TWEET: 27 ஆண்டுகளுக்குப்பின் பெய்த வரலாற்றுச் சிறப்புமிக்க மழை! - வானிலை ஆய்வாளர்கள்

சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜூன் மாதத்தில் பெய்த வரலாற்றுச் சிறப்புமிக்க மழை என தமிழ்நாடு வெதர்மேன் ட்விட்டரில் தகவல் தெரிவித்து உள்ளார்.

27 ஆண்டுகளுக்குப்பின் பெய்த வரலாற்றுச் சிறப்புமிக்க மழை வெதர்மேன் ட்விட்

author img

By

Published : Jun 19, 2023, 11:26 AM IST

சென்னை: நள்ளிரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கனமழையின் எச்சரிக்கை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19-06-2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 200 ஆண்டுகளில் 150 மி.மீ. வேறு எந்த ஆண்டும் இதுபோன்ற மழை பெய்யவில்லை. ஜூன் மாத கனமழை மிகவும் அரிதானது. 3வது முறையாக ஜூன் மாதத்தில் பெய்த மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்சென்னை மற்றும் சென்னையின் வேறு சில பகுதிகளிலும் 150 மி.மீ. அளவு மழைப் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக துபாய், தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், நந்தனத்தில் அதிக பட்சமாக 12 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம் 10.7 செ.மீ மழையும், குன்றத்தூர் 8.8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட் செய்து உள்ளார். அதில், சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க மழை பெய்து உள்ளது எனவும், 1991, 1996க்குப் பிறகு இப்போது 2023ல் வரலாறு காணாத மழை பெய்து உள்ளது என்றும்; ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

  • 2k kids are the lucky ones, holiday in June due to extreme heat and now the heavy rains. June month normal is just 55 mm for chennai, some places have got 3 times of that in a single day in less than 6 hrs. pic.twitter.com/B4tXt1l0tP

    — Tamil Nadu Weatherman (@praddy06) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை, வேப்பேரியில் சாலை போன்ற இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சுரங்கப் பாலங்களில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மண்டல அதிகாரிகளுக்கு, “சென்னை சாலைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்வதை மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய தனி கவனம் செலுத்த வேண்டும். மேலும் சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த உபகரணங்களுடன் குழுக்களை தயார் செய்ய வேண்டும்” என்று உத்தரவு வழங்கி உள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை; காரணம் என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.