கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நீதிமன்றங்களில் நேரடியாக வழக்கு விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை. வழக்குகள் அனைத்தும் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் பெரும்பாலான வழக்குரைஞர்கள் தங்களுடைய வாழ்வாதரத்தை இழந்திருப்பதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பாக ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களை திறக்க வேண்டும், வழக்குரைஞர்களுக்கு நிவாரணமாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வங்கிகளில் மூன்று லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், வழக்குரைஞர் பரமகுரு படுகொலையில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைத்தனர்.