ETV Bharat / state

'எடப்பாடியா? ஸ்டாலினா? என்றால் மக்களின் தேர்வு முதலமைச்சர் பழனிசாமி' - அமைச்சர் பாண்டியராஜன் - நடிகர் கமல்ஹாசன்

சென்னை: எடப்பாடியா? ஸ்டாலினா? என்றால் முதலமைச்சர் பழனிசாமியை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என திருவேற்காட்டில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன்
அமைச்சர் பாண்டியராஜன்
author img

By

Published : Oct 18, 2020, 7:55 AM IST

அதிமுக அரசின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருவேற்காடு பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

"நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவன் இந்திய அளவில் பத்து இடத்திற்குள் வந்தது பெருமைமிக்க விஷயம். தமிழ்நாடு அரசு நீட் பயிற்சிக்காக எடுத்த முயற்சிக்கு பெரும் வெற்றி என நம்புகிறேன். தேர்ச்சி விகிதம் 42 விழுக்காட்டில் இருந்து தற்போது 57 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மற்ற தேர்வுகளை போல இதிலும் முதலிடத்தில் வருவோம் என நம்புகிறேன்.

நடிகர் கமல்ஹாசன் முதலமைச்சர் வேட்பாளர் என்று அவர்கள் கட்சி சார்பில் அறிவித்துள்ளார்கள். கூட்டணி வைக்கப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், சாதனைகளை வைத்து நாங்கள் வாக்கு கேட்போம், அதேசமயம் நடிகர் கமலின் சாதனைகள் ஏதும் அரசியல் களத்தில் இல்லை. அவரது சாதனைகள் அனைத்தும் கலைத்துறையில்தான் உள்ளது. அந்த சாதனையை சொல்லி அரசியல் களத்தில் வாக்கு கேட்க முடியாது.

எடப்பாடி பழனிசாமியா, ஸ்டாலினா என கேள்வி வரும்போது பொதுமக்கள் கேள்வியே கேட்காமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குகள் அளிப்பார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: டூ பிளேசிஸ், ராயூடு அதிரடியால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.