சென்னை:நடிகை அஞ்சலி முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் 2007ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.இதுவே இவருக்கு முதல் படமாகும் தமிழில் ஏராளமான படங்கள் மூலம் நல்ல நடிகை என்று பெயர் வாங்கினார்.பின்னர் அங்காடித் தெரு படம் மூலம் தனது நடிப்பை வெளிகாட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் நடிகையாக மாறினார்.
பின்னர் மங்காத்தா படத்தின் மூலம் இவருக்கு மேலும் பெருமை சேர்ந்தது.மீண்டும் தமிழ் சினிமாவில் இணைய கலகலப்பு ,எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் வாய்ப்பாக அமைந்தன. தற்போது தமிழ் படங்கள் நடிப்பதில் மிகவும் பிஸியாகி விட்டார்.இப்படியே தமிழ், தெலுங்கு என நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகை அஞ்சலியின் 50வது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடிகை அஞ்சலி நடிக்கும் ஐம்பதாவது படம் "ஈகை" என பெயர் சூட்டப்பட்டு இயக்குனர் இமையம் பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி ஆகியோரின் முன்னிலையில் படப்பிடிப்போடு துவங்கப்பட்டது.மேலும் இப்படத்தை கிரீன் அமூசிமெண்ட் புரொடக்சன்ஸ் மற்றும் D3 புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதா பாத்திரங்களான :இயக்குனர் பாரதிராஜா ,புஷ்பா பட வில்லன் சுனில் ,இளவரசு , புகழ் மற்றும் அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா,நிஷாந்த் ரகு ,கிருஷ்ண சந்தர்,காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் இப்படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி ஆகிய ஐந்து மொழிகளில்”ஈகை” படம் தயாராகிறது.மேலும் இந்த படம் சென்னை,ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய பெரு நகரங்களில் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற சமூக கருத்துகள் நிறைந்த படமாக உருவாகும்.மேலும் நம் சமூகத்தில் ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு படமே இந்த "ஈகை" என்கிறார் இயக்குனர் அசோக் வேலாயுதம்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைக்கிறார்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.கடந்த வருடம் ஹன்சிகா தனது 50வது படமான ’மகா” படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.அதனை தொடர்ந்து தற்போது அஞ்சலியும் தனது 50வது படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஹீரோக்கள் ஐம்பது படங்களில் நடிப்பது என்பது தற்போது இயல்பாகி விட்ட ஒன்றாகும் ஆனால் நடிகைகள் ஐம்பது படங்களை பூர்த்தி செய்வது என்பது கடினம்.ஆனாலும் சினிமாவில் ஐம்பது படங்களை கடந்த நடிகை அஞ்சலிக்கு வெகுவாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க:Leo Movie Song: போஸ்டர் அடி அண்ணன் ரெடி.. பட்டையை கிளப்பும் விஜயின் லியோ பாடல்!