ETV Bharat / state

வேகமாக பரவும் கரோனா, தடுப்பூசி மட்டுமே பாதுகாப்பு - நடிகர் விவேக்

சென்னை: கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி மட்டுமே மருத்துவ ரீதியான ஒரே பாதுகாப்பு என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 15, 2021, 3:46 PM IST

actor-vivk
விவேக்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை திரைப்பட நடிகர் விவேக் அவரது நண்பர்களுடன் வந்து செலுத்திக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தடுப்பூசி குறித்து பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டேன். இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் ஒரு நாளைக்கு 7819 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரே பாதுகாப்பு. இது தவிர சித்த மருந்துகளும், வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது என்பது கூடுதல் பாதுகாப்பாகும். தடுப்பூசி இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்புச் சக்தி நம் உடலில் உண்டாகும். அதுவரை நாம் பாதுகாப்பில்லாமல் இருந்து கரோனா வந்தால், நாம் தடுப்பூசி மேல் பழியைப் போடக்கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் சமூகப் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் நாம் இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும், செவிலியர்களும் சேவை மனப்பான்மையுடன், மிகவும் திறமையாக பணிபுரிகின்றனர். எனவே பொதுமக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு எந்த பாதிப்பும் வரவில்லை என்பது அரசின் முடிவாக இருக்கிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், " நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மக்கள் பதற்றம் அடையாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இறப்பு விழுக்காடு 1.39 என்ற அளவில் குறைந்துள்ளது. எனவே, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இயற்கைப் பேரிடராக இந்த நோய் உள்ளதால், யாரிடம் இருந்து வருகிறது என்பது தெரியாது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் காலம் தாழ்த்தி மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. நோயினால் பாதிக்கப்படுபவர்களை கண்டறிந்து படுக்கை காலியாக உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். தமிழ்நாட்டில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: ’கரோனாவின் 2ஆவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டது’ - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.