ETV Bharat / state

நடிகர் விஜயின் அலுவலக கணக்காளர் பாலியல் புகாரில் கைது.. நடந்தது என்ன? - அண்ணாநகர் மகளிர் போலீஸ்

Vijay Office assistant arrest: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் விஜயின் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிய ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான ராஜேஷ்
கைதான ராஜேஷ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 1:48 PM IST

சென்னை: சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த நவம்பர் மாதம் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வரும் அப்பெண்ணிற்கு தோழி மூலம் கிண்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ராஜேஷ், தனக்கு திருமணம் ஆகவில்லை. அப்பெண்ணை தீவிரமாக காதலிக்கிறேன் என்றும், திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் பழகி வந்த நிலையில் அப்பெண்ணிடம், ராஜேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்த நிலையில், தன்னை ஏமாற்றிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் அப்பெண் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று (ஜன.1) அதிகாலை ராஜேஷை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில், இவர், நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக, போலீசார் ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் மீது வேறு ஏதாவது வழக்குகள் பதிவாகி இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் காவலர் தற்கொலை - போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.