ETV Bharat / state

சிவாஜி கணேசன் மகள் தொடர்ந்த உரிமையியல் வழக்கு தள்ளிவைப்பு! - madras high court

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள் தொடர்ந்த உரிமையியல் வழக்கு வருகிற ஜூலை 18 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிவாஜி கணேசன் மகள் தொடர்ந்த உரிமையியல் வழக்கு தள்ளிவைப்பு!

author img

By

Published : Jul 8, 2022, 10:21 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் நடிப்பு ஜாம்பவானான நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி, சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதில், ‘இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக, எங்களது தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் எங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்குத் தெரியாமல் தந்தை சொத்துக்களை விற்றுள்ளார்கள். அந்த விற்பனைப்பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

மேலும் ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர். சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கை ஜூலை 18 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 9 மணிக்கு தீர்ப்பு.. 9.15 க்கு பொதுக்குழு? - எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ள அதிமுக பொதுக்குழு விவாதங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.