ETV Bharat / state

Aishwarya Arjun: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு டும் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? - Director Thambi Ramaiah son umapathy

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், இயக்குநர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா நடிகர் உமாபதி திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாக தகவல்

author img

By

Published : Jun 25, 2023, 7:52 PM IST

சென்னை: நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர். தமிழில் நன்றி படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 90களில் மிகவும் பிஸியான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

கதாநாயகனாகத் திரையுலகைக் கலக்கியது மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். சமீப காலமாக வில்லன் வேடங்களில் கதாநாயகர்களின் வருகை அதிகரித்து வெற்றி கண்டு வரும் நிலையில், அர்ஜுன் வில்லன் வேடங்களில் நடித்து வருவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரது மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின்‌ மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு போதிய வாய்ப்புகள் வரவில்லை.

இந்த நிலையில் இவரும், தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வருவதாகத் தகவல் வெளியானது. உமாபதி தமிழில் ஒரு கூட முத்தம், தண்ணி வண்டி, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்கள் பெருமளவில் வெற்றி பெறாத காரணத்தால், திரையுலகில் இன்னும் தனக்கான இடத்தை தேடி வருகிறார்.

அதைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியில் உமாபதி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கினார். அப்போது அர்ஜுன் குடும்பத்துடன் தம்பி ராமையா குடும்பத்தினருக்கு நட்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் உமாபதி, ஐஸ்வர்யா இருவரும் காதலிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவெடுத்துள்ளனர். திருமணம் குறித்து இந்த இருவீட்டாரும் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரை ஜோடிகள் நிஜ ஜோடியாக மாறும் திருமண நிகழ்வும், திரைக் குடும்பங்கள் உறவினர்களாகும் அற்புத தருணமும் காலம் காலமாக நடந்து வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் தான் நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமணம் செய்து கொண்டனர். மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு திரைத் திருமணம் நடக்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் உள்ளதாகப் பலரும் தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Project K : ஆதிபுருஷ் உடன் இணையும் விஸ்வரூபம் - ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைந்த கமல்ஹாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.