ETV Bharat / state

நரபலி கொடுக்க துடிக்கும் வளர்ப்பு தாய்.. சென்னைக்கு தப்பி வந்த பெண்.. ஐகோர்ட்டில் போட்ட மனு.. - Young woman from Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஐகோர்ட்டில் போட்ட மனு
ஐகோர்ட்டில் போட்ட மனு
author img

By

Published : Feb 22, 2023, 8:59 PM IST

சென்னை: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான ஷாலினி சர்மா தாக்கல் செய்த மனுவில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த நான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏபிவிபியில் முன்பு உறுப்பினராக இருந்தேன். எனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர். மாந்த்ரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்டவர்.

எனது 10 வயது சகோதரன் உள்பட 3 பேரை அவர் நரபலி கொடுத்துள்ளார். இப்போது என்னையும் நரபலி கொடுக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க யாருக்கும் தைரியமில்லை. இந்த நரபலி திட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னைக்கு வந்தேன்.

தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கி இருக்கிறேன். எனது குடும்பத்தினரும், ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக என்னை போபால் அழைத்துச் சென்றுவிட வாய்ப்புள்ளது. அப்படி வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு கொண்டு சென்றுவிட்டால் நான் நரபலி கொடுக்கப்படுவேன். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மோர்பி பாலம் விபத்து: 135 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.