ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் தகவல் - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

Mk Stalin: மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(அக்.16) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனைக் கூட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 5:19 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் இன்று (அக்.16) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் ரூபாய் ஆயிரத்தி 763 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலை வாய்ப்பில் 4 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

  • மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்திற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகளிடம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்துரையாடி அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். pic.twitter.com/iPLAADmjVi

    — CMOTamilNadu (@CMOTamilnadu) October 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திராவிட மாடல் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும், நலன் பேணும் அரசாகவும் செயல்பட்டு வருகிறது. ஒரு மாற்றுத் திறனாளிகள் கூட பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலி பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்த 92 மையங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் சேவை புரியும் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்குவதற்காக 22 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களுக்கு தற்போது வழங்கும் கல்வி உரிமைத் தொகையை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறோம்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது. pic.twitter.com/UdoEMFnMej

உயர்கல்வி பயிலும் 1000 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கருவிகள் வழங்குவதற்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி ஆகியவற்றில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு முதன்மை தேர்வு எழுத தலா 50ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேசிய நிதி மேம்பாட்டு கழகத்தின் கீழ் கடன் பெறும் மாற்றுத்திறனாளிகள் உரிய சமயத்தில் கடனை திருப்பி செலுத்தும்போது, கடனுக்கான வட்டி தொகையை மாநில அரசு செலுத்துகிறது. தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி கடன் வழங்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டு 14 ஆயிரத்து 271 மாற்றுத்திறனாளிகளுக்கு 64 கோடி ரூபாய் செலவில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறுகுறு தொழில் மற்றும் பெட்டி கடைத் தொடங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஐந்து வகை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் 'மாதாந்திர உரிமைத் தொகை' ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஒருகால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட 'ஸ்கூட்டர்', விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக இடைநிலை பராமரிப்பு மையம் மற்றும் 'மீண்டும் இல்லம்' என்ற புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் சமுதாயத்தில் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. மனநலம் மற்றும் அறிவு சார்ந்த மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மூலம் மூன்று இல்லங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலம் வாரியம் மூலம் வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித்தொகைகள் அதிகரித்து வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழல் உருவாக்க புதிய கட்டிடங்கள் அனைத்திலும் மின் தூக்கி, சாய்வு தலப்பாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு உரிய கழிவறைகள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடையற்ற சூழல் உருவாகும் நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் தடை இல்லாமல் மேற்கொள்ளும் நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை, தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் நடக்கும் வகையில் சிறப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

'விடியல் வீடு' என்னும் முன்னோடி திட்டம் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைதளத்தில் வீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகை ஜெயப்பிரதா வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! என்ன செய்யப் போகிறார் ஜெயப்பிரதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.