ETV Bharat / state

திருவான்மியூரில் வீடு புகுந்து கொலை... "சிவன் சொன்னார் கொன்றேன்" என வாக்குமூலம்! - கிரைம்

Thiruvanmiyur murder issue: திருவான்மியூரில் வீடு புகுந்து ஒருவரை கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த நபர், சிவன் சொன்னார் அதனால் கொன்றேன் என வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Thiruvanmiyur murder issue
திருவான்மியூரில் வீடு புகுந்து கொலை... "சிவன் சொன்னார் கொன்னேன்" என வாக்குமூலம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 2:16 PM IST

சென்னை: திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50), இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக மனைவியை பிரிந்த செந்தில்குமார், திருவான்மியூர் திருமுடி விநாயகர் கோயில் தெருவில், மூக்குபொடி சித்தர் கோயில் அருகில் ஒரு அறையில் வடமாநில நபர்களோடு தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

மேலும் அங்குள்ள மூக்குபொடி சித்தர் கோயிலுக்கு நீலாங்கரையை சேர்ந்த கமல் உஸ்மான்(48) என்பவர் தினந்தோறும் வந்து சாமி கும்பிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் அவர் தங்கியிருக்கும் அறைக்கு பெண்களை அழைத்து வருவதும், சித்தர் கோயில் அருகே நின்று பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கமல் உஸ்மான் இது குறித்து சிவனிடம் முறையிட்டுள்ளார். சிவனிடம் முறையிட்ட அவர் போது சிவன் செந்தில் குமாரை கொலை செய்ய சொன்னதாகவும், அதனால் நேற்று (அக்.30) மாலை கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு செந்தில் குமார் தங்கியிருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கே இருந்த செந்தில்குமாரை கமல் உஸ்மான் கத்தியால் 18 முறைக்கு மேல் வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு, திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரணடந்துள்ளார். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற திருவான்மியூர் காவல் துறையினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த செந்தில்குமாரை மீட்டு இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவி செய்த போலீசார் கமல் உஸ்மானிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் சரணடைந்த கமல் உஸ்மான் அளத்த வாக்குமூலத்தைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வாக்குமூலத்தில் கமல் உஸ்மான் கூறியதாவது, "சிவன் சொன்னதால் கொலை செய்தேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததால், போதை தெளிந்தவுடன் விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சரிவை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை...! முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.