ETV Bharat / state

நகைக்கடை கொள்ளை வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறுகிறதா போலீஸ்? - பெரம்பூர் திருட்டு சம்பவம்

பெரம்பூர் நகைக்கடையில் ஓட்டை போட்டு கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், தீவிர தேடல் வேட்டையில் ஈடுபட்டும் எந்த துப்பு கிடைக்காமல் போலீசார் 17 நாட்களாக திணறி வருகின்றனர்.

நகைக்கடையில் ஓட்டை போட்டு கொள்ளை
நகைக்கடையில் ஓட்டை போட்டு கொள்ளை
author img

By

Published : Feb 28, 2023, 7:26 AM IST

சென்னை: பெரம்பூரில் உள்ள ஒரு நகைக்கடையில் வெல்டிங் மிஷினால் ஓட்டை போட்டு கடந்த 10 ஆம் தேதி ஒரு மர்ம கும்பல் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து சென்றது. மேலும் நகைக்கடையில் இருந்த டி.வி.ஆர் கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர். போலீஸ் பூத் அருகே நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்கள் தப்பி சென்ற காரின் பதிவெண் கிடைத்தது. ஆனால் அந்த வாகன எண்ணை விசாரித்த போது போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து பல மாநிலங்களுக்கு சென்ற தனிப்படை போலீசார், இதே போல ஓட்டைப்போட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களிடமும், கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் ஆதாரங்களை வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இருந்த போதிலும் கடந்த 17 நாட்களாக கொள்ளையர்கள் குறித்த எந்த ஒரு துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். இந்த நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது மூன்று சிசிடிவி காட்சிகள் மற்றும் இரு கொள்ளையர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதுவரை நடந்தது குறித்து போஸீசார் விளக்கம்:

"அதாவது கடந்த 9 ஆம் தேதி திருத்தணி வழியாக 5 கொள்ளையர்கள் போலி பதிவெண் கொண்ட காரில் வந்துள்ளனர். பின் கடந்த 10 ஆம் தேதி அதிகாலை 2.10 மணி அளவில் பெரம்பூர் நகைக்கடைக்கு காரில் மங்கி குல்லா மற்றும் கையுறை அணிந்து வந்த கொள்ளையர்கள் சுவர் மீது ஏறி குதித்து நகைக்கடைக்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் கடையின் ஷட்டரை வெல்டிங் மிஷினால் ஓட்டை போட்டு லாக்கரில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகை என அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அதிகாலை 4.30 மணி அளவில் கொள்ளையர்கள் தப்பி செல்வது போன்ற சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

அதிலும் ஒரு கொள்ளையன் கையுரையை கடைக்குள் தவறவிட்டதால் மீண்டும் சென்று எடுத்து வரும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. கொள்ளையடித்த பின்பு 10 நிமிடத்தில் மதுரவாயலை காரில் கடந்த கொள்ளையர்கள், ஆந்திரா மாநிலம் சித்தூரை நோக்கி தப்பி செல்வதும் தெரிய வந்தது.

கொள்ளையர்கள் கைரேகை மற்றும் முகம் சிசிடிவி காட்சியில் பதிவாகாத படி நுணுக்கமாக கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கொள்ளையர்களின் அடையாளங்களை வைத்து சுமார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்த போதும் ஒரு துப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு கொள்ளையடிக்க வரும் முன்னர் கடந்த 9 ஆம் தேதி இரு கொள்ளையர்கள் திருத்தணி அருகே ஓட்டலில் உணவு வாங்கும் போது ஒரு சிசிடிவி காட்சியில் சிக்கி உள்ளனர். சிக்கிய அந்த கொள்ளையர்களின் புகைப்படத்தை அனைத்து மாநில போலீசாருக்கும் அனுப்பி போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் கர்நாடகவை சேர்ந்தவரகள் போல் கொள்ளையர்கள் இருப்பதால் தனிப்படை போலீசார் பெங்களூருக்கு விரைந்துள்ளனர். மேலும் அனைத்து மாநில போலீசாரிடமும், சென்னை தனிப்படை போலீசார் உதவி கோரி உள்ளனர்". மேலும் ஒரு தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து கொள்ளையர்களின் இரு புகைப்படங்களையும் வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: பிப்ரவரி 28ஆம் தேதிக்கான ராசி பலன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.