ETV Bharat / state

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வு வழங்கியதில் சர்ச்சை - governor rn ravi

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்றவருக்கு பதிவாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது.

a complaint in the governor
ஆளுநரிடம் புகார்
author img

By

Published : Mar 20, 2023, 4:59 PM IST

Updated : Mar 20, 2023, 6:59 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (TNTEU) பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் பதிவாளர் பதவியில் கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு என நியமித்து, கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாக உள்ளவர்களை பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, தொலைநோக்கு பார்வையுடன் நிறுவப்பட்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். முதலில் தற்காலிக கட்டடத்தில் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் வளாகத்தில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து சென்னையின் புறநகர் பகுதியான காரப்பாக்கத்தில் தனியாக பல்கலைக் கழகத்திற்கான வளாகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் பி.எட், எம்.எட், M.Phil மற்றும் Ph.D போன்ற பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 642 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.

அவற்றில் 7 அரசும், 14 உதவி பெறும் கல்லூரிகளாகவும், மற்றவை சுயநிதி கல்லூரிகளாகவும் இருக்கின்றன. கல்லூரிகளின் இணைப்பை 3 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக, பல்கலை துணைவேந்தர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் பி.சி.நாகசுப்ரமணி பிப்ரவரி 7-ம் தேதி பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவரை பதிவாளர் பொறுப்பில் இருந்த சுந்தரராஜன் விடுக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பேராசிரியர் பதவி உயர்விற்கான சிண்டிகேட் கூட்டத்தில் இவரின் பெயர் இடம் பெற்றபோது, அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து புகார் அனுப்பி உள்ளனர். அதனடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 20.10.22அன்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்திற்கான தீர்மானத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மட்டுமே கையொப்பம் போட்டுள்ளனர். அதிலும் கல்லூரி கல்வி இயக்குநர் தனது எதிர்ப்பு கருத்தை பதிவு செய்து கையொப்பமும் போட்டுள்ளார். 14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளனர். மற்ற 10 பேர் பதவி உயர்விற்கு கையொப்பம் போடாமல் இருந்துள்ளனர்.

"தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு": ஆளுநரிடம் புகார்

பி.சி.நாகசுப்ரமணி ஆசிரியராக அவர் நுழைந்ததில் இருந்தே, அவரது தகுதியில் குழப்பம் இருந்து வருகிறது. சிண்டிகேட் உறுப்பினர்கள் பதவி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இணை பேராசிரியர் நாகசுப்பிரமணி என்பவர் மோசடியாக முன் அனுபவச் சான்றுகளை வழங்கியுள்ளார். எனவே, அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன் என்பரும் முன்னாள் துணைவேந்தராக இருந்த பஞ்சநாதனுக்கும் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவரின் முன் அனுபவச் சான்றுகள் போலியானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற ஆவணங்களையும் இணைத்து தந்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருக்கும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கொழந்தைசாமி என்பவர் அனுப்பி உள்ள மனுவில், "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் இணை பேராசிரியர் நாகசுப்பிரமணி என்பவர் 2015ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்துள்ளார். அவர் அளித்த அனுபவச் சான்றிதழ்கள் போலி ஆவணங்களின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது எனவும், அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் புகார் பெறப்பட்டப் போதும், அதனை பொருட்படுத்தாமல் அப்போதைய துணைவேந்தர் பஞ்சநாதன் பதிவு உயர்வு வழங்கி உள்ளார். இதனால் அங்கு பணிபுரியும் மற்ற ஆசிரியர்களும், கல்வியாளர்களும் கொந்தளித்துள்ளனர். இந்த நிலையில் சிண்டிக்கேட் கூட்ட தீர்மானத்தில் கையொப்பம் போடாத மற்றவர்களிடம் கையெழுத்து பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு கேசிஆர் மகள் கவிதா ஆஜர்!

Last Updated : Mar 20, 2023, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.