ETV Bharat / state

சென்னையில் 50 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து தரைமட்டம்! பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு!

Building Collapsed: சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Building Collapsed
கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 5:13 PM IST

50 ஆண்டுகள் பழமையானக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு

சென்னை: திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையான கட்டடம் பல நாட்களாக மூடிய நிலையில் இருந்தது. இந்த கட்டடம் அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மற்றும் அவர்களது சகோதரர்கள் மூன்று பேருக்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த கட்டடத்தை இடிப்பதற்காக சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அதற்கான ஆணையைக் கட்டடத்தின் உரிமையாளர்கள் பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் இன்று காலை மூடிய நிலையில் இருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கட்டத்திலும் அதன் அருகிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்டடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஜாம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டட உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த கட்டடமானது, “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகவும், இந்த கட்டடத்தை இடிப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் சென்னை மாநகராட்சியில் இதற்கான ஆணையை பெற்றிருப்பதாகவும், ஆனால் மின்சார வாரியத்தில் இருந்து அனுமதி வழங்க தாமதம் ஏற்பட்டதால் கட்டடத்தை இடிப்பதற்கான வேலை நடக்கவில்லை என கட்டடத்தின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்”.

இதையும் படிங்க: ஜிம்மில் சுருண்டு விழுந்து இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.