சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்துவந்த ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்றுநோய் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கு கோவிட்-19 கண்டறிதல் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இந்தச் சோதனையின்போது அவரின் தாத்தாவிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து, அவரைச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்துவந்துள்ளனர். 98 வயதான அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை இருந்துள்ளன.
அவரை குணப்படுத்துவதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி முதியவர் இன்று உயிரிழந்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அவரின் உடல் மாநகராட்சி அலுவலர்களால் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதுவரை சென்னையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவ ஊழியர்களின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கும் தொலைக்காட்சி ஊழியரின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் தடுப்புக்காப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தனிமைப்படுத்தப்படும் வெளிமாநிலத்திலிருந்து வரும் லாரி ஓட்டுநர்கள்!