ETV Bharat / state

சென்னைக்கு ரயிலில் வந்த பயணியிடம் கணக்கில் வராத ரூ 78 லட்சம் பறிமுதல்!! - chennai central

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த ஆந்திர பயணியிடம் கணக்கில் வராத 78 லட்சம் ரூபாயை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த பயணியிடம் கணக்கில் வராத 78 லட்சம் ரூபாய் பறிமுதல்!!

author img

By

Published : Jun 22, 2022, 1:24 PM IST

சென்னை: கொல்கத்தா ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று காலை வந்தது.

அப்போது அந்த ரயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த பயணி ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரது கையில் இருந்த பையில் 78,44,000 ரூபாய் இருந்தது. பின்னர் அவரை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூரை சேர்ந்த வேங்கட சதீஷ்(36) என்பது தெரியவந்தது.

மேலும் விஜயவாடாவில் இருந்து டிக்கெட் எடுக்காமல் சென்னை சென்ட்ரல் வரை ரயிலில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பணத்திற்கு உண்டான சரியான ஆவணங்கள் சதீஷிடம் இல்லாததால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 78 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் சதீஷ் கொண்டுவந்த 78 லட்ச ரூபாய் ஹவாலா பணமா என வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் லோன் செயலி மூலம் மிரட்டல் - சூளைமேடு இளைஞர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.