ETV Bharat / state

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 70 புலிகள் உயிரிழப்பு.. வேட்டையாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா.? - வேட்டையாடப்படும் புலிகள்

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 70 புலிகள் இறந்துள்ள நிலையில், அவை வேட்டையாடப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் 70 புலிகள் உயிரிழப்பு

author img

By

Published : Feb 26, 2023, 7:40 PM IST

Updated : Feb 26, 2023, 10:09 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என 5 இடங்களில் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வனத்துறை தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2014ம் ஆண்டு 229 புலிகள் இருந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது. ஒருபுறம் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் வேட்டையாடப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 70 புலிகள் இறந்துள்ள நிலையில், நாட்டிலேயே புலிகள் இறப்பு விகிதத்தில் 6வது இடத்தில் உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) தரவுகள் தெரிவிக்கின்றன. இது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலிகளை பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், "புலிகள் காப்பகங்களில் உள்ளது போல, தனியார் தோட்டங்களிலும், புலிகள் அதிகம் நடமாடும் இடங்களிலும் வேட்டை தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும். இதனை கண்காணிப்பதற்கு திறம்பட செயல்படக்கூடிய வன அதிகாரிகளையும் நியமிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. புலிகள் காப்பகத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

முந்தைய ஆண்டுகளில் உள்ளது போல, புலிகள் காப்பகங்களுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் வேட்டையாடுபவர்களுக்கு கடுமையான தண்டனையை உடனே வழங்க வேண்டும். 'புலிகள் பாதுகாப்பு திட்டம்' (Project Tiger) அலுவலகத்தை சென்னையில் இருந்து மீண்டும் கோவைக்கு மாற்ற வேண்டும். பவாரியா வேட்டை கும்பல் புலிகளை மட்டுமே வேட்டையாடும் என கூற முடியாது." என குறிப்பிட்டார்.

தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி கூறுகையில், "சத்தியமங்கலத்தில் அண்மையில் பிரபல பவாரியா வேட்டை கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அனைத்து புலிகள் காப்பகங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க, காப்புக்காடுகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகளின் இறப்பை வேட்டையாடப்படுவதுடன் ஒப்பிட முடியாது. பெரும்பாலான புலிகள் இயற்கையாகவே மரணம் அடையும். எனினும் புலிகள் வேட்டையாடப்படுவதன் பின்னணியில் மாஃபியா செயல்படுகிறதா என்பதையும் வனத்துறை விசாரித்து வருகிறது" என்றார். இந்நிலையில், தேசிய புலிகள் ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 70 புலிகளின் மரணத்தில் 44 புலிகள், காப்பக பகுதிக்கு உட்பட்ட இடங்களிலும், எஞ்சியவை காப்பக பகுதிகளுக்கு வெளியேயும் இறந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கல்குவாரி மாஃபியாக்களால் அழியும் விவசாயம் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கை எப்போது?

Last Updated : Feb 26, 2023, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.