ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 am

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

ETV Bharat News
ETV Bharat News
author img

By

Published : May 19, 2020, 6:52 AM IST

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான கோகா-தஹேஜ் ரோ-ரோ படகு சேவையின் 29 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான கோகா-தஹேஜ் ரோ-ரோ படகு சேவையின் மொத்தமுள்ள 33 ஊழியர்களில் 29 பேருக்கு 50 சதவீத ஊதியம் வழங்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

'என்னது அம்பானி சொத்து மதிப்பை விட ஐந்து மடங்கு பெரியதா... இந்தத் திட்டம்'

மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் அல்லது தன்னம்பிக்கை இந்தியா மிஷன் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியான 20 லட்சம் கோடி ரூபாய் என்பது 2019 -2020 நிதி ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடாகும். மற்ற உலக நாடுகளை விட பெரும் அளவு தொகையை இந்தியா ஒதுக்கியுள்ளது.

ஊரடங்கை தளர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஜெனிவா: உலக நாடுகள் முன்கூட்டியே ஊரடங்கை தளர்த்துவதால், கோவிட்-19 தாக்கம் மேலும் தீவிரமடைவதற்கு வாய்ப்புள்ளது என்று, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.

ஆண்ட்ராய்டு செயலி வடிவில் உலாவும் வங்கிக் கொள்ளை வைரஸ்!

“ஈவென்ட் பாட்” செயலி தீம்பொருளாக செயல்பட்டு வங்கிச் சேவைகள், பணப் பரிமாற்றங்கள், வேலட் கணக்குகளை உளவுப் பார்த்து தரவுகளை திருடி வருவதாக சிஇஆர்டி எச்சரித்துள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்ட வங்கி இ சேவை செயலிகளின் தகவல்களை இது உளவு பார்த்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 30ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மே 30ஆம் தேதி முதல் பணிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் பொய் பிரச்சாரம் - அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை செய்வதே இல்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரோனாவுக்கு பிந்தைய காலம் கடுமையாக இருக்கும்: நீதியரசர் சுந்தரேஷ்

சென்னை: கரோனா காலம் கடுமையானது என்றால், அதற்கு பின்னர் வரும் காலம் இன்னும் கடுமையானதாக இருக்கும், இனி வழக்குகளின் தன்மையும் வேறு மாதிரியாக இருக்கும் என சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மட்டும் 764 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

சென்னை : கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கு வகையில் அறிவிக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 764ஆக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

'அது ஜாய் புல்... இது ஜெயில் புல்...' - சமையல் அறையில் இருந்த படத்தை வெளியிட்ட மெகா ஸ்டார்!

நடிகர் சிரஞ்சீவி தனது வீட்டின் சமையலறையில் இருந்து சமைக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளிட்டுள்ளார்.

‘நானும் அவரும் ஒன்றல்ல’ - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆசாம்!

நானும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஒன்றல்ல என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.