ETV Bharat / state

சென்னையில் 644.60 மெட்ரிக் டன் மரக்கழிவுகள் அகற்றம்

சென்னையில் மாண்டஸ் புயலின் காரணமாக மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்தில் 644.60 மெட்ரிக் டன் மரக்கழிவுகள் குவிந்தன. இதனை மாநகராட்சி விரைவில் அகற்றியதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் மாண்டஸ் புயலால் 644.60 மெட்ரிக் டன் மரங்கள் விழுந்துள்ளது

author img

By

Published : Dec 11, 2022, 10:27 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் மாண்டஸ் புயல் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக 261 மர அறுவை எந்திரங்கள், 67 டெலஸ்கோபிக் மர அறுவை எந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை எந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை எந்திரங்கள் முன்கூட்டியே மாநகராட்சி சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து விழுந்த மரங்கள் மற்றும் கிளைகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”டிசம்பர் 9ஆம் தேதி மாண்டஸ் புயல் கரையை கடக்கும் பொழுது ஏற்பட்ட அதிக காற்றின் காரணமாக 15 மண்டலங்களிலும் 207 மரங்களும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில் விழுந்தன. இந்த மரக்கிளைகள் அனைத்தையும் மாநகராட்சி பணியாளர்கள் அன்றிவு முதலே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் அகற்ற தொடங்கினர். அவ்வாறு அகற்றப்பட்ட 644.60 மெட்ரிக் டன் எடையுள்ள மரக்கழிவுகள் மாநகராட்சியின் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல்.. சேதங்களுக்கு ஏற்றார் போல் பேரிடர் நிவாரணம்... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.