சென்னையில் உள்ள ஒரகடம் அப்போலோ டயர்களின் முக்கிய உற்பத்தி பிரிவாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் டயர்கள் சாலை மூலமாக வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இது அதிக செல்வு பிடித்தது.
இந்நிலையில், பார்சல்களை கொண்டு செல்வதற்கான கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தெற்கு ரயில்வேயில் சென்னை பிரிவு முதன்முறையாக ஆட்டோமொபைல் எடுத்துச் செல்லும் பெட்டிகளை பயன்படுத்தி டயர்களை கொண்டு செல்ல முடிவுசெய்தது.
இதன்மூலம் ரயில்வே துறைக்கு 19.55 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மொத்தமாக ரூ. 606 டன் டயர்களை ஏற்றுவதன் மூலம் 32.14 லட்சம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.