இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறுகையில், "தொடக்க கல்வித் துறை இயக்குநர் கடந்தாண்டு நவம்பர் 22ஆம் தேதி ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து செயல்முறை ஒன்றை வெளியிட்டார்.
அதில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயும் தேர்வு மையம் அமைக்க வேண்டும். மாணவர்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார். இதனால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர். எனவே ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மையங்கள் எங்கு அமைக்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்: செங்கோட்டையன்!