சென்னையில் பாம்ப பண்ணை என்றாலே நினைவுக்கு வருவது கிண்டி பாம்பு பண்ணை. சுற்றுலா பயணிகளில் குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் விதமாக இந்த பாம்பு பண்ணை அமைந்திருக்கிறது. ஆனால், கரோனா தொற்று பேரிடர் இந்த பாம்பு பண்ணைக்கு பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், இதனை நடத்தும் அறங்காவலர்களுக்கு நிதி பற்றாக்குக்குறையினால் இதனை மூடலாமா? என்ற அளவுக்கு யோசிக்க வைத்துள்ளது.
மேலும், பெரிய வனவிலங்கு சுற்றுலா தலமான வண்டலூர் உயிரியியல் பூங்கா, புலிகள் மற்றும் யானைகள் சரணாலயம் போன்று இதனை கவனித்துக்கொள்ள அரசு சரியான நிதியும் ஒதுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கரோனா தொற்று பாதிப்பு எதிரொலி காரணமாக ஐம்பது வருட பாம்பு பண்ணை மூடப்படலாம் என இதனை நடத்தி வரும் அறக்கட்டளை செய்தி அறிக்கையை ஒன்றை வெளியிட்டது.
இந்த செய்தி வனத்துறை அலுவலர்களை பெரும் அதிரிச்சியடைய செய்துள்ளது. அறக்கட்டளை நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பாம்பு பண்ணையை எக்காரணமும் கொண்டு மூடக்கூடாது. அதற்கான உதவிகளை வனத்துறை செய்யும் எனவும் உறுதி அளித்ததாக தகவல் வெளியானது.
பாம்பு பண்ணையின் நிலை;
இதுகுறித்து சென்னை பாம்பு பண்ணை இயக்குனர் ஆர்.ராஜரெத்தினம் கூறுகையில், "சென்னை பாம்பு பண்ணையானது 1952ஆம் ஆண்டு சில இயற்கை ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. இது தேசிய அளவில் புகழ் பெற்ற பாம்புகளுக்கென ஒரு சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. மொத்தம் 30 வகையான ஊர்வனவைகளில், 20 வகை பாம்புகளை மட்டுமே கொண்டதாகும். மொத்தம் 300 வகையான ஊர்வனங்களை இந்த வளாகத்தில் பார்க்க முடியும்.
இத்தனை ஆண்டுகளாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் வசூலிக்கப்பட்ட நிதியின் மூலம் இந்த பண்ணையை நடத்தி வந்தோம். எனிமும், கரோனா பெருந்தொற்றால் இந்த பண்ணையானது பல மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது. இதனால் பாம்பு பண்ணையை நடத்த இயலவில்லை. அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிதி கொடுத்ததால் நன்றாக இருக்கும்” என கூறினார்.
அதுமட்டுமின்றி, நிதி பற்றாக்குறையால் இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்த இயக்குனர் வனத்துறை இந்த பிரச்சினையை திரும்பி பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு நம்மிடம் பேசுகையில், "வனத்துறை இதுகுறித்து விழிப்புணர்வோடு இருக்கிறது. மேலும், நாங்கள் பாம்பு பண்ணையை நடத்துகிற அறங்காவலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். வனத்துறையால் இயன்ற அளவுக்கு உதவிகளை செய்ய உறுதி அளித்திருக்கிறோம். மேலும் அரசு இதை எடுத்து நடத்த முடியுமா என்பதை பற்றி இப்போது கருத்து கூற இயலாது” என்றார்.
பாம்பு பண்ணை பூங்காவை மூட வாய்பே இல்லை;
மேலும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நம்மிடம் கூறுகையில், "பாம்பு பண்ணை பூங்காவை மூடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த பூங்காவை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக நிதி ஒதுக்க நிதித்துறையிடம் அணுகியுள்ளோம். கூடிய விரைவில் நிதியை பெற்று தமிழ்நாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள் ஆகியவற்றை விரிவுபடுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது” என்றார்.
பாம்பு பண்ணை வரலாறு;
1972ஆம் ஆண்டு பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டேக்கர் தலைமையிலான இயற்கை ஆர்வலர் குழுவினால் உருவாக்கப்பட்ட 'சென்னை பாம்பு பண்ணை டிரஸ்ட்' கீழ் இயங்கிவரும் சென்னை பாம்பு பூங்கா, தமிழ்நாடு அல்லாமல் இந்திய அளவில் பிரபலமானது. இங்கு பராமரிக்கப்படும் பலவகையான பாம்புகளையும், முதலைகளையும் காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இது பிரபலமாகி உள்ள நிலையில், அவர்கள் இந்த பூங்காவிற்கு வருகை தந்து பாம்பு வகைகளை கண்டுகளித்து செல்வார்கள். இந்த பூங்காவை பராமரிக்கும் அலுவலர்களின் கூற்றுப்படி, கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் இந்த பூங்கா 80 லட்சத்தை இழந்துள்ளது. மேலும், விலங்குகளுக்கு உணவளிக்க போதிய நிதி இல்லை என்ற நிலையும் தற்போது வரை நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: 'டாஸ்மாக் திறப்பு ஏன்?' - முதலமைச்சர் விளக்கம்