சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தனிப்படை காவல் துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது நுங்கம்பாக்கம் காமராஜபுரம் பொதக் கழிப்பிடம் அருகே இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து தனிப்படையினர் விசாரிக்கும்போது, கஞ்சா புகைத்திருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் விசாரித்ததில், ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (29) என்பதும் மற்றொருவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தாயூப் (28) என்பதும் தெரியவந்தது. தாயூப் தனது வீட்டில் 40 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து காவல் துறையினர் அவரது வீட்டிற்குச் சென்று கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் தாயூப்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அனுப்பிவிட்டு, தினேஷிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 17 வயது சிறுவன் கைது