ETV Bharat / state

கையூட்டு பெற்ற தேர்தல் அலுவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்! - தேர்தல் பறக்கும் படை

சென்னை: வாகன சோதனையின்போது பறிமுதல் செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்க இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம்!
author img

By

Published : Apr 2, 2019, 2:08 PM IST

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குகன். உணவு பண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார். இவர் இன்று ஐ.சி.எஃப். தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி வழியாக காரில் சென்றுள்ளார்.

அப்போது தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், அவரது வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் அதனை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, தேர்தல் பறக்கும்படை அலுவலர்களான பாபு, வாசுதேவன், கார்த்திகேயன், வீரமணிஆகியோர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்றால் இரண்டாயிரம் ரூபாய்லஞ்சமாககேட்டுள்ளனர்.

இதையடுத்து, ஜெயக்குகன் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தார். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் பறந்தது.

இதன்பேரில், மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் சங்கீதா தீவிர விசாரணை மேற்கொண்டதில் தேர்தல் அலுவலர்கள் நான்கு பேர் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

4 police officers dismissed

Intro:வாகன சோதனை பொழுது பறிமுதல் செய்த பணத்தை திரும்ப ஒப்படைக்க 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம்.

Body:சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குகன். உணவு பண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.இவர் இன்று ஐ.சி.எப் பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், சென்னை பெருமாநகராட்சி உதவி பொறியாளர் பாபுவும்,கோயம்பேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன், காவலர்கள் கார்த்திகேயன், வீரமணி ஆகியோர் ஜெகன் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அவரது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் இருந்ததை பறிமுதல் செய்தனர்.அதற்கு ஜெய்குகன் 50 ஆயிரம் வரை எடுத்துச் செல்லலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .இறுதியில் 2 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் ஜெய்குகனை அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது தொடர்பாக தேர்தல் உதவி அலுவலர் சங்கீதா அவர்களை விசாரணை மேற்கொள்ள தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் உத்தரவிட்டதை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்டதில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அந்த நான்கு பேரையும் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Conclusion:விசாரணை மேற்கொண்டதில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.இதனை தொடர்ந்து அந்த நான்கு பேரையும் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.