ETV Bharat / state

'ஓலா ஆப்' மூலம் நூதன முறையில் கார் திருட்டு: 4 பேர் கைது! - ஓலா ஆப் மூலம் நூதன முறையில் கார் களவாடும் கும்பல்

சென்னை: 'ஓலா ஆப்' மூலம் காரை புக் செய்து விட்டு ஓட்டுனரின் கவனத்தை திசை திருப்பி காரை களவாடி செல்லும் கும்பலை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓலா ஆப் மூலம் நூதன முறையில் கார் திருட்டு

author img

By

Published : May 13, 2021, 1:30 PM IST

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ஜகன்(37); கார் ஓட்டுநர். இவர் கடந்த ஏப்.28ஆம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சென்ட்ரல் அருகே மதுரவாயல், தாம்பரம் செல்ல வேண்டும் என 'ஓலா ஆப்' மூலம் புக் செய்து இரண்டு நபர்கள் எனது காரில் ஏறினர். சிறிது நேரத்தில் இருவரும் மதுபானம் வாங்கி வருமாறு என்னை கேட்டு கொண்டதையடுத்து, நான் காரை நிறுத்தி விட்டு மதுபானம் வாங்கிய பின்னர், திரும்பி வந்து பார்க்கும் போது தனது காரை அந்த இரு நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

அவர்கள் இருவரையும் கைது செய்து தனது காரை மீட்டு தருமாறு அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நசரத்பேட்டை பகுதியிலும் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அதே நபர்கள் காரைத் திருடி சென்றது தெரியவந்ததது.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடர்களின் முகம் சரியாக தெரியாததால், 'ஓலா ஆப்'பில், அந்த நபர்கள் புக் செய்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் காரை திருடிச் சென்றவர்கள் கார்த்திக் (27), குலோத்துங்கன்(23) என்பது தெரிய வந்தது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் வீடு புகுந்து திருடுதல், செயின் பறிப்பு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டால் காவல்துறையினரிடம் எளிதாக சிக்கி கொள்வதாக எண்ணி நூதன முறையில் காரைத் திருட முடிவு செய்ததாக தெரிவித்தனர். தொடர் விசாரணையில், நசரத் பேட்டை, கோயம்பேட்டில் 2 கார்கள் என 1 மாதத்தில் 3 கார்களை திருடி சென்றது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, இவர்களிடமிருந்து 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட மேலும் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'சிறு குறு தொழில் கடன்களுக்கான இஎம்ஐ செலுத்த 6 மாத காலம் அவகாசம்' - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.