ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.15 கோடி மதிப்புடைய தங்கம், மின்னணு சாதனம் பறிமுதல்

இலங்கை, துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.2.15 கோடி மதிப்புடைய 4.15 கிலோ தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள், சிகரெட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து 2 இலங்கை பயணிகள் உட்பட 4 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.15 கோடி மதிப்புடைய 4.15 கிலோ தங்கம் மின்னணு சாதனம்- பறிமுதல்

author img

By

Published : Jul 21, 2022, 6:39 PM IST

சென்னை: இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை சோதனையிட்டனா். அப்போது இலங்கையை சோ்ந்த 2 பயணிகள் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்த இலங்கை பயணிகள் தங்களிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றனா்.

ஆனால் சுங்கத்துறை சந்தேகத்தில் அவா்களை மீண்டும் உள்ளே அழைத்து வந்து சோதித்தனா். அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் 6 பாா்சல்கள் இருந்தன. அதைப்பிரித்து பாா்த்ததில், 2.58 கிலோ எடையுடைய தங்கப்பசை இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த 2 பயணிகளிடமிருந்து, உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த 4 பாா்சல்களை பறிமுதல் செய்தனா். அதில் 1.57 கிலோ தங்கப்பசை, தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா். மேலும் அவா்களின் உடமைகளில் மின்னணு சாதனங்கள், வெளி நாட்டு சிகரெட்கள் ரூ.18.15 லட்சம் மதிப்புடையதையும் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இலங்கை, துபாயிலிருந்து வந்த 2 விமானங்களில், 4 பயணிகளிடமிருந்து ரூ.1.82 கோடி மதிப்புடைய 4.15 கிலோ தங்கம், 18.15 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்கள், சிகரெட்கள், மொத்தம் ரூ.2.15 கோடி பொருட்களை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து 4 பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் டோல்கேட்டில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.