சென்னை: ஐஸ் ஹவுஸ் வைக்கோல் தொட்டி தெருவில் கேரளாவைச் சேர்ந்த பஷீர் - சஜீனா தம்பதி சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்குக் குடியேறியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமான தொலைப்பேசி அழைப்புகள் சென்றுள்ளன. வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகள் போல் மாற்றி மோசடி செய்ததால், பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படவே இது தொடர்பாக தீவிர ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் ஐஸ் ஹவுஸ் பகுதியிலிருந்து வெளிநாட்டு அழைப்புகள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் பிஎஸ்என்எல் அதிகாரிகள் பஷீர் சஜினா தங்கி இருந்த வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் வீட்டில் இல்லை.
வீட்டு உரிமையாளர் முன்னிலையில் பஷீர் தங்கி இருந்த வீட்டைத் திறந்து சோதனை செய்த போது, 2500 சிம் கார்டுகள், தொழில்நுட்ப உபகரணங்கள் இருந்தன. இதையடுத்து வேறு பூட்டு வைத்து வீட்டைப் பூட்டிவிட்டு, பிஎஸ்என்எல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். தலைமறைவான தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் ஆளுநரின் பொறுப்பு என்ன? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு!