ETV Bharat / state

வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வுக்கு 22 ஆயிரம் பேர் ஆப்சென்ட்!

சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கம்ப்யூட்டர் ஆன்லைன் தேர்விற்கு 22 ஆயிரத்து 24 தேர்வர்கள் பங்கேற்கவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Teachers Recruitment Board
ஆசிரியர் தேர்வு வாரியம்
author img

By

Published : Feb 17, 2020, 12:13 PM IST

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 97 பேரை நியமனம் செய்வதற்கான கம்ப்யூட்டர் வழி தேர்வு 14 ,15, 16 ஆகிய தேதிகளில் காலை, மாலை என இரு வேலைகளிலும் தமிழ்நாடு முழுவதும் 57 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை 24 ஆயிரத்து 420 ஆண்களும், 40 ஆயிரத்து 266 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர் என சுமார் 64 ஆயிரத்து 710 நபர்கள் எழுதுவதற்கு பதிவு செய்திருந்தனர்.

இவர்களுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வு எழுத வந்தவர்கள் சோதனை செய்த பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் பல்வேறு நடைமுறைகள் கொண்டு வந்ததால் எவ்வித குழப்பமுமின்றி தேர்வு நடத்தப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர் தெரிவித்தார்.

மேலும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 18 ஆயிரத்து 788 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில் 12 ஆயிரத்து 437 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். அதேபோல் 15ஆம் தேதி நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 23 ஆயிரத்து 739 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில் 15 ஆயிரத்து 316 தேர்வர்கள் ஆன்லைன் மூலம் தேர்வினை எழுதியுள்ளனர்.

இன்று (பிப்ரவரி 16ஆம் தேதி) நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 22 ஆயிரத்து 684 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவர்களில் 14 ஆயிரத்து 933 தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 97 பேரை நியமனம் செய்வதற்கான தேர்வு எழுதுவதற்கு 64 ஆயிரத்து 710 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 42 ஆயிரத்து 686 தேர்வர்கள் மட்டுமே எழுதியுள்ளனர். அதாவது 66 சதவீத தேர்வர்கள் தேர்வினை எழுதி உள்ளனர் ஆகையால் தேர்வில் 22 ஆயிரத்து 24 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வில் முதல் முறையாக அவர்களுக்கான தேர்வு நடைபெறும் நகரங்கள் பத்து நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. தேர்வு மையங்கள் மூன்று நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. பெண் தேர்வர்கள், கர்ப்பிணிகள் தவிர, ஆண்கள் வேறு மாவட்டங்களில் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குருப்-4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.