சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அவ்வப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் எண்ணிக்கை, விவரங்களைச் செய்தியாளர் சந்திப்பில் காவல் துறையினர் தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “கடந்த 28ஆம் தேதிமுதல் இன்று (மார்ச் 26) காலை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 209 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களின்றி பணம், விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டுசென்றதாக 177 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
உரிமம் பெற்ற ஆயிரத்து 799 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 42 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் ஆயிரத்து 892 ரவுடிகளிடம், ஆறு மாதம் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க பிராமண பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது” என்றனர்.
இதையும் படிங்க: கர்நாடக மக்களவை இடைத்தேர்தல்: மறைந்த அமைச்சரின் மனைவிக்கு பாஜக வாய்ப்பு!