ETV Bharat / state

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இறுதி செய்யும் பணி தீவிரம்

சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி இறுதி செய்யும் பணி தீவிரம்

author img

By

Published : Feb 9, 2021, 2:25 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மாநில, உள்ளூர் விடுமுறை தேதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இரண்டு லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இணைவதற்காக விண்ணப்பித்துள்ளனர். பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 விழுக்காடு தயார் நிலையில் உள்ளன.

வாக்குச்சாவடிகள் 67 ஆயிரத்திலிருந்து 93 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மாநில, உள்ளூர் விடுமுறை தேதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன" என்றார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணைய உயர் அலுவலர்கள் நாளை (பிப்.10) காலை 11 மணிக்கு சென்னை வர உள்ளனர். பின்னர் அவர்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைத் தனித்தனியே சந்தித்து கருத்துகள் கேட்க உள்ளனர்.

அதேபோல் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மண்டல ஐஜி-க்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர், அலுவலர்கள் நேரில் ஆலோசனை நடத்த உள்ளனர் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: வேலூரில் கூடுதலாக 562 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.