ETV Bharat / state

கல்வி தொலைக்காட்சி பார்த்த 2.07 கோடி பேர் - 2.07 crore people watched educational television

சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சியின் வீடியோக்களை இரண்டு கோடியே 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

2.07 crore people watched educational television

author img

By

Published : Nov 22, 2020, 12:33 PM IST

இது தொடர்பாக கல்வி தொலைக்காட்சியின் சிறப்பு அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "கரோனா பெருந்தொற்று காலத்தில் ஆகஸ்டு 26ஆம் தேதி முதல் வீட்டு பள்ளி என்ற தலைப்பில் கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக ஒளிபரப்பு செய்து வருகிறது.

இதில் இரண்டாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ வடிவில் தயாரித்து அதனை கல்வி தொலைக்காட்சி மூலமும்,11 தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி யூடியூப் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பாடநிகழ்ச்சிகளை பார்க்கத் தவறும் மாணவர்களுக்கு கல்வி டிவியின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் kalvi official.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இது பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளன. டிவியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்களை 2 கோடியே 7 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர். ஒரு கோடியே 6 லட்சம் பார்வையாளர்கள் 64,000 மணி நேரம் பார்த்து உள்ளனர்.

மேலும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு கேள்வி பதில், தடையும் விடையும் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படுகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பின் முக்கியத்துவத்தையும், கரோனா காலகட்டத்தில் வீட்டு பள்ளி நிகழ்ச்சி வாயிலாக பாடங்களை கற்பதற்கான அவசியத்தை தெரிவிக்க வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் சேனல்களின் விபரங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி யூடியூப் சேனல் மூலம் பாடங்களை பலமுறை பார்த்து பயன்பெறவும், புதிய பாடங்கள் பதிவேற்றம் செய்த தகவல் பெறுவதற்கும் துணையாக இருக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு அட்டவணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.