சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 1,288 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை 30,632 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மேலும் 1,288 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 70 லட்சத்து 29 ஆயிரத்து 158 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 35 லட்சத்து 48 ஆயிரத்து 195 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 11,392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 1,691 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 98 ஆயிரத்து 770 என உயர்ந்துள்ளது. சென்னையில் 283 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 115 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 138 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 61 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தியாவில் குரங்கம்மை தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதா..? - மன்சுக் மாண்டவியா பதில்