ETV Bharat / state

பேக் குடோனில் பணியாற்றிய 11 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு! - சென்னை செய்திகள்

சென்னையில் பேக் குடோனில் நடத்திய சோதனையில் 11 வடமாநில குழந்தை தொழிலாளர்களை சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

11 North State child laborers who worked in bag Warehouse in Chennai have been rescued
சென்னையில் பேக் குடோனில் பணியாற்றிய 11 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
author img

By

Published : Apr 12, 2023, 2:45 PM IST

சென்னை: அதிகப்படியான தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் இருக்கக்கூடிய இடங்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி செவ்வாய் தோறும் சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆர்.டி.ஓ, வட்டாட்சியர் உள்ளிட்டோருடன் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று மண்ணடி மீரா லப்பை தெரு, முக்கர் நல்லமுத்து தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு ஆகிய மூன்று இடங்களில் உள்ள பேக் செய்யும் குடோனில் சென்னை மாவட்ட குழந்தைகள் தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குடோனில் பணியாற்றிய 18 வயதுக்கு கீழ் உள்ள 11 குழந்தை தொழிலாளர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணையில், 10 பேர் பீகார் மாநிலமும், ஒருவர் நேபாள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் காலை 11 மணி முதல் 5 மணி வரையிலும், மீண்டும் 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் சிறிய அறை கொடுத்து சம்பளம் கொடுக்காமல் வெறும் உணவு மட்டுமே கொடுத்து. இவர்களை வேலை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ஜெயலட்சுமி, இன்று மண்ணடியில் மூன்று தெருக்களில் உள்ள பேக் செய்யும் கடைகளில் சோதனை நடத்தி 11 குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளதாகவும் தாங்கள் வருவதை அறிந்த கடையின் உரிமையாளர்கள் சிலர் குழந்தைத் தொழிலாளர்களை அடைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட குழந்தைகளைக் குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும், அதன் பிறகு அவர்களைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கிய கடையின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் உதவி ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு பீர் பஸ்(Beer Bus) அறிமுகம்.. மதுப்பிரியர்கள் குஷி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.