ETV Bharat / state

மதிப்பெண் அடிப்படையில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - அமைச்சர் செங்கோட்டையன் - தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10th result should be published on the basis of marks

author img

By

Published : Aug 4, 2020, 3:48 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலில் மாணவர்கள் நலன் காக்கும் வகையில், கல்வி கற்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை எடுத்துச்செல்ல பத்து தொலைக்காட்சிகள் நேரம் ஒதுக்கியுள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் ஐ.சி.டி திட்டம் அடிப்படையில் உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசியக் கல்வி கொள்கை குறித்து ஆராயக் குழு அமைக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். மிக விரைவில் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழு அளிக்கும் அடிப்படையில் முடிவுகள் விரைவில் எடுக்கப்படும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு முன்னதாகவே, திரும்பப் பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் தான் வெளியிடப்படும். அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார்' எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.