ETV Bharat / state

100 ஆண்டுகள் பழமையான கோயில்கள் -  புனரமைக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்!

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 100 ஆண்டுகள் பழமையான கோயில்களைப் பழமை மாறாமல் புனரமைத்து பாதுகாக்க தொல்லியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

100 ஆண்டு பழமையான கோயில்கள்
100 ஆண்டு பழமையான கோயில்கள்
author img

By

Published : Dec 12, 2021, 7:40 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் 100 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட திருக்கோயில்களை தரவரிசைப்படுத்தி முறையாகப் பராமரித்து, புனரமைப்பது குறித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை இன்று (டிச.12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவையாகும்.

இந்தக்கோயில்கள் கட்டடக் கலையின் சிறப்புகளை பறைசாற்றுவதுடன், தமிழர்களின் நாகரிகத்தை வெளிப்படுத்துபவையாகவும் உள்ளன. மேலும் பல்வேறு கோயில்களின் மூலிகை ஓவியங்களை, பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிப்பது அவசியமாகும்.

தொல்லியல் ஆலோசகர்கள் நியமனம்

இப்பணியினை தொல்லியல் துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, அவர்களது மேற்பார்வையில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் அதன் பழமையினை பாதுகாக்க இயலும்.

இதற்காக காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மற்றும் கடலூர் ஆகிய ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும் தொல்லியல் ஆலோசகர்கள் நிபந்தைகளுக்குட்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தொல்லியல் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இணை ஆணையர் மண்டலத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோயில்களை ஆய்வு செய்து, அவற்றின் தொன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தி சம்மந்தப்பட்ட இணை ஆணையர் மூலம் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கோயில்களை நேரில் ஆய்வு செய்து அவற்றைப் புனரமைப்பது குறித்து, உரிய ஆலோசனைகளை ஆணையர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் வழங்குவார்கள்.

தொல்லியல் துறை ஆலோசகர்கள் மேற்கொள்ள வேண்டிய மற்றப் பணிகள் குறித்து ஆணையரால் அவ்வப்போது அறிவுரை வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தர்மபுரி மருத்துவ மாணவர் ராகிங் கொடுமைக்கு ஆளான விவகாரம் - 4 சீனியர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.