ETV Bharat / state

குடிசைமாற்று வாரியம் மூலம் 1.55 லட்சம் வீடுகள்..! - ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: குடிசைமாற்று வாரியம் மூலம் ரூ.7,627 கோடி மதிப்பில் 1.55 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

deputy chief minister
author img

By

Published : Jul 20, 2019, 2:51 PM IST

தமிழ்நாடு முழவதும் கடந்த எட்டு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "தமிழ்நாட்டில் 2011-16 வரை 14,063 வீடுகளும், 2016-2019 வரை 10,284 வீடுகளும் வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் எட்டு ஆண்டுகளில் 24,347 வீடுகள் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளன.

அதேபோல் குடிசைமாற்று வாரியம் மூலம் 1970 முதல் 2011 வரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் 7,627 கோடி ரூபாயில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததுபோல 2023ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்" என்றார்.

Intro:Body: குடிசை மாற்று வாரியம் மூலம் 7627 கோடியில் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதல்வர் பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கடந்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துணை முதல்வர்.

தமிழகத்தில் 2011-16 வரை 14063 வீடுகளும் 2016-2019 வரை 10284 வீடுகளும் வீட்டுவசதி வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 8 ஆண்டுகளில் 24,347 வீடுகள் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டிருப்பதாக துணை முதல்வர் தெரிவித்தார்.

குடிசை மாற்று வாரியம் மூலம் 1970 முதல் 2011 வரை கட்டப்பட்ட வீடுகள் 1 லட்சத்து 11 ஆயிரம் மட்டுமே ஆனால் கடந்த 8 ஆண்டிகளில் குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் 7627 கோடியில் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது போல 2023 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும் என்று துணை முதல்வர் தெரிவித்தார்.

தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மக்கள் 300 சதுர அடியில் வீடுகள் கட்டிக்கொள்ள 14 ஆயிரத்து 165 கோடியில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 765 வீடுகள் கட்டிக்கொள்ள முடிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 825 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும். 1 லட்சத்து 47 ஆயிரத்து 608 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும்.

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 13 ஆயிரத்து 391 கோடி மதிப்பில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 275 வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டு 22 ஆயிரத்து 264 வீடுகள் கட்டு முடிக்கப்பட்டு 48 ஆயிரத்து 938 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் துணை முதல்வர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.