ETV Bharat / state

செங்கல்பட்டில் வெடிக்காத நிலையில் கிடந்த லாஞ்சர் ராக்கெட் குண்டுகளால் பரபரப்பு

author img

By

Published : Oct 31, 2022, 9:24 AM IST

செங்கல்பட்டில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மூன்று லாஞ்சர் ராக்கெட் குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டில் வெடிக்காத நிலையில் கிடந்த லாஞ்சர் ராக்கெட் குண்டுகளால் பரபரப்பு
செங்கல்பட்டில் வெடிக்காத நிலையில் கிடந்த லாஞ்சர் ராக்கெட் குண்டுகளால் பரபரப்பு

செங்கல்பட்டு: வண்டலூர் அருகே அனுமந்தபுரம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள காட்டுப் பகுதியில் ராணுவ பயிற்சி முகாமில் துப்பாக்கிகள், லாஞ்சர் மூலம் செலுத்தப்படும் குண்டுகள், புகை குண்டுகள் ஆகியவற்றை உபயோகப்படுத்த வீரர்கள் பயிற்சி பெறுவார்கள். இந்த பயிற்சியின்போது பொதுமக்கள், கால்நடைகள் இப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

மேலும் பயிற்சி முடிந்தவுடன், பயிற்சிக்கு உபயோகப்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடி குண்டுகள் உள்பட ஆயுதக் கழிவுகளை ராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் வெடிகுண்டுகள் போன்ற மூன்று பொருட்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து வண்டலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சிங்கார வேலன் தலைமையிலான காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் அங்கு கிடந்தவை லாஞ்சர் மூலம் செலுத்தப்படும் வெடிகுண்டுகள் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு குண்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.