ETV Bharat / state

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி! - செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி!
சுற்றுலா பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி!
author img

By

Published : May 30, 2022, 11:01 AM IST

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 53 பேர், தென் மாவட்டங்களில் உள்ள புனித தலங்களுக்கு தனியார் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இன்று மே 30 அதிகாலை 4 மணியளவில், பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை என்ற இடத்தில் வரும்போது நிலைதடுமாறியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி!

தகவலறிந்து சென்ற மதுராந்தகம் போலீசார் தனியார் பேருந்தை மீட்டு விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இரு யானைகளுக்கு இடையே மோதல்- வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.